இலங்கை பெண்ணை போதைக்கு அடிமையாக்கி பாலியல் கொடுமை செய்ததாக தொடரப்பட்ட ஆட் கொணர்வு வழக்கில் தொலைக்காட்சி நடிகை புவனேஸ்வரி நேற்று நீதிமன்றில்  நேரில் ஆஜராகினார்.

இலங்கையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய மகளை நடிகை  புவனேஸ்வரியின் வீட்டில் வைத்து போதைக்கு அடிமையாக்கி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவரை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணைக்காக நடிகை புவனேஷ்வரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி நேற்று நடிகை புவனேஸ்வரி நீதிபதிகள் முன்பு நேற்று நேரில் ஆஜரானார். அப்போது நடிகை புவனேஸ்வரி, மிதுன், இளம் பெண் ஆகியோரிடம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வரி, இந்த விவகாரத்தில்  தனக்கு எந்த தொடர்பும் இல்லை. சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரே அவரை அடித்து, கொடுமைப் படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.