வீட்டு வளகத்தில் காணப்பட்ட குப்பைகளுக்கு தீ மூட்டிக் கொண்டிருந்த போது அதற்குள் காணப்பட்ட தொலைபேசி பெற்றரி ஒன்று வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இச் சம்பவம் நேற்று மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

படுகாயமடைந்த குறித்த பெண், தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.பஸீரா (31) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.