தெஹி­வளை பகு­தியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரும் கப்பம் பெறும் நோக்­கி­லேயே கடத்­தப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டு குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு விசேட அறிக்கை ஒன்­றினை சமர்ப்­பித்­தது.  

11 பேரும் எவ்­வித பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளு­டனும் தொடர்­பற்­ற­வர்கள் என கடந்த 8 வரு­டங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­பட்ட நிலையில் கடற்­படை தள­ப­தியின் கையொப்­பத்­துடன் சி.ஐ.டி. க்கு அனுப்­பப்பட்­டுள்ள கடி­தத்தை மையப்­ப­டுத்­தியே குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வாவின் கையொப்­பத்­துடன் பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க இந்த மேல­திக விசா­ரணை அறிக்­கையை நேற்று நீதி­வா­னுக்கு கைய­ளித்தார்.

 மேல­திக விசா­ரணை அறிக்­கையில் தற்­போது கைது செய்­யப்­ப­டு­வ­தற்­காக தேடப்­பட்டு வரும், கடற்­ப­டையின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி, ஐந்து மாண­வர்­களைக் கடத்தும் போது தெஹி­வ­ளையில் உள்ள அலி அன்வர் ஹாஜியார் என்­ப­வரின் வீட்டில் கீழ் மாடியில் இருந்­த­தாக சாட்­சிகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் அவர் கடத்­த­லுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­க­ட­்டப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன்  அமலன் லியோன், ரொஷான் லியோ­னுக்கு என்ன நடந்­தது என்­ப­தையும் ஹெட்டி ஆரச்சி நன்கு அறிந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்தும் வித­மாக அவர்கள் இரு­வரும் கண்கள், கை கால்கள் கட்­டப்­பட்டு ஹெட்டி ஆரச்­சியின் அலு­வ­ல­கத்தில் முழங்­காலில் வைக்­கப்ப ட்டிருந்தை கண்ட சாட்­சி­யங்கள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடாக கோட்டை மேல­திக நீதிவான் லங்கா ஜய­ரத்­னவின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­துள்­ளது.

இத­னை­விட விசா­ர­ணைக்கு தேவையான பல இரக­சிய ஆவ­ணங்கள் உள்­ளிட்­ட­வற்றை கடற்­படை தொடர்ந்து குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வுக்கு வழங்க மறுத்­து­வ­ரு­வ­தாக விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்வா சுட்­டிக்­காட்­டி­ய­தை­ய­டுத்து, கடந்த தவ­ணையின் போது குற்­ற­வியல் சட்­டத்தின் 124 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக அந்த அத்­தனை ஆவ­ணங்­க­ளையும் ஒக்­டோபர் 27 ஆம் திக­திக்கு முன்னர் சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்க நீதிவான் லங்கா ஜய­ரத்ன கடற்­படை தள­ப­திக்கு கட்­ட­ளை­யிட்ட போதும் அவை இன்னும் தமக்கு கிடைக்­க­வில்லை என சி.ஐ.டி. அதி­கா­ரி­யான பொலிஸ்  பரி­சோ­தகர் இளங்­க­சிங்க மன்றில் தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து புதிய கடற்­படை தள­ப­திக்கு அந்த ஆவ­ணங்­களை உட­ன­டி­யாக  கைய­ளிக்க ஞாப­கப்­ப­டுத்தல் கடிதம் ஒன்­றினை நீதிவான் அனுப்­பினார். 

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு  5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போகச் செய்­யப்பட்ட சம்­பவம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜய­ரத்ன முன்­னி­லையில் மீளவும் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போதே இந்த விவ­கா­ரத்தில் தற்­போது கைது செய்­யப்­ப­டு­வ­தற்­காக தேடப்­பட்டு வரும் கடற்­ப­டையின் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியைக் கைது செய்ய பகி­ரங்க பிடி­யா­ணையும் நீதிம­ன்­றினால்  பிறப்­பிக்­கப்­பட்­டது.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­த­தி­ருந்­தது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சானி அபே­சே­க­ரவின் நேரடி  கட்­டுப்­பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் நேற்­றைய விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது சந்­தேக நபர்­களில் கடந்த தவணை ஆஜ­ரா­காத  தஸ­நா­யக்க அம்­பி­யூலன்ஸ்  வண்­டியில் அழைத்து வரப்­பட்டு சக்­கர நாட்­கா­லியில் நீதி­மன்­றுக்குள் அழைத்து வரப்­பட்டார். இதன்­போது அவர் வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிறைச்­சாலை வைத்­திய அத்­தி­யட்­சகரின் ஆலோ­ச­னைக்கு அமை­யவே சிகிச்சைப் பெறு­வ­தாக அறிக்கை ஒன்று  சமர்ப்­பிக்­கப்­பட்­டது. ஏற்­க­னவே தஸ­ந­யக்­க­வுக்கு சட்ட வைத்­திய அதி­காரி  எந்த நோயும் இல்லை என அறிக்கை சமர்ப்­பித்­துள்ள நிலையில் அவ்­விரு அறிக்­கை­க­ளையும் வைத்து அடுத்த தவ­ணையில் சிறந்த தீர்ப்­பொன்றை வழங்­கு­வ­தாக நீதிவான் லங்கா ஜய­ரத்ன இதன்­போது அறி­வித்தார்.

விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா குரு­ணாகல் மேல் நீதி­மன்றில் வழக்­கொன்றில் ஆஜ­ராக சென்­றி­ருந்த நிலையில், மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் இளங்க சிங்க, மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடாக மன்­றுக்கு விசா­ரணை நிலை­மையை முன்­வைத்தார்.

அந்த அறிக்­கையில் திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்கு சென்று, ஏற்­க­னவே நீதி­மன்­றுக்கு அறி­வித்­ததன் பிர­காரம்  விசா­ர­ணை­களை நடாத்­தி­யதில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட பல தக­வல்கள் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக  முதலாம் சந்­தேக நபரின் கீழ் சேவை­யாற்­றிய  சந்­ர­கு­மார மற்றும் சுசந்த எனும் இரு கடற்­படை வீரர்கள் வழங்­கிய வாக்கு மூலத்தில், வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்கள் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதில் 5 மாண­வர்­களை கடத்­து­வ­தற்­காக திட்­ட­மிட்டு தெஹி­வ­ளையில் உள்ள அலி அன்வர் ஹாஜி­யாரின் வீட்டின் மேல் மாடியில் தாங்கள் இருந்த போது கீழ் மாடியில் ஹெட்டி ஆரச்சி இருந்­த­தாக அவர்கள் தகவல் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அத்­துடன் மன்­னாரைச்சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகியோர் கண்கள் மற்றும் கை கால்கள் கட்­டப்­பட்டு ஹெட்டி ஆரச்­சியின் அலு­வ­ல­கத்தில் முழங்­காலில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையை தாம் கண்­ட­தா­கவும் கடத்­தப்­பட்­ட­வர்கள் பின்னர் ரண­சிங்­க­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தா­கவும் அவர்கள் வாக்கு மூலம் ஊடாக வெளிப்­ப­டுத்­திய தக­வல்கள் நீதி­மன்றின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டி­ருந்­தன.

கடற்­படை, கடத்­தப்­பட்ட 11 பேரும்

எவ்­வித பயங்­க­ர­வாத செயல்­க­ளு­டனும் தொடர்­பற்­ற­வர்கள் என அறிக்கை

வழங்­கி­யுள்ள நிலையில், இவர்கள் கப்பம்

பெறும் நோக்­கத்­துக்­கா­கவே கடத்­தப்­பட்

­டுள்­ள­தாக வழங்கியுள்ள நிலையில்,

இவர்கள் கப்பம் பெறும் நோக்கத்

துக்காகவே கடத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.

யின் மேலதிக அறிக்கையில் சுட்டிக்

காட்டப்பட்டுள்ளது. அத்துடன் கடற்படை

யின் ஓரிருவர் செய்துள்ள இந்த

காரியத்தால் முழுகடற்படைக்கும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

 கடற்படை தொடர்ந்து விசாரணைக்கு தேவையான ஆவணங்களை வழங்காது இருந்து வரும் நிலையில், நேற்று மீள ஞாபகப்படுத்தல் கடிதத்தை புதிய கடற்படை தளபதிக்கு அனுப்பிய நீதி

வான், அறிக்கையைப் பெற்று  விசா ரணைகளை நடாத்த சி.ஐ.டி.க்கு ஆலோ

சனை வழங்கியதுடன்  முதல் சந்தேக நபர் தவிர ஏனையோரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் 15 வரை நீடித்தார்.