சைட்டம் மருத்­துவ கல்­லூரி  அர­சாங்­கத் தின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. அது லாப­நோக்­க­மற்ற ஒரு நிறு­வ­ன­மாக இயங்க உள்­ளது. மேலும் சைட்டம் நிறு­வனம் இரத்துச் செய்­யப்­ப­ட­வு­மில்லை என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு அமைச்­ச­ரவை  முடி­வு­களை அறிவிக்­கை­யி­லேயே  அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்; 

சைட்டம் நிறு­வனம் இரத்து செய்­யப்­ப­ட­வில்லை. அது அவ்­வாறே இயங்கும் ஆனால்  இலா­ப­நோக்­க­மற்ற நிறு­வ­ன­மாக இயங்கும். மேலும்  சைட்டம் நிறு­வனம் அர­சாங்­கத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. 

கேள்வி: அப்­ப­டி­யாயின் உயர்­கல்வி அமைச்சு நிர்­வ­கிக்கும் என்று கூறப்­பட்­டுள்­ளதே? 

பதில் உயர்­கல்வி அமைச்சு  மேற்­பார்வை செய்யும். 

கேள்வி: இதற்கு நெவில்  பெர்­னாண்டோ இணங்­கி­னாரா?

பதில்: அவர் அதற்கு  இணங்­கி­ய­தா­கவே அறிக்கை கூறு­கி­றது. 

கேள்வி: அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் இணங்­கி­யுள்­ளதா?

பதில்: அவர்கள் ஆத­ரித்­துள்­ளார்கள் என்றே கேள்­வி­யுற்றேன்

கேள்வி:  இலாப நோக்­க­மற்ற நிறு­வனம் என்றால் எப்­படி?

பதில்: நிறுவனத்தினால் பெறப்படுகின்ற  இலாபம்  நபர்களின் கைகளுக்கு போகாது அந்த  நிறுவனத்தில் வளர்ச்சிக்கே செல்லும்  என்றார்.