நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்­டிக்கு நான் பெரிய ரசிகன் இல்லை என்று இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்­பவான் குமார் சங்­கக்­கார கூறி­யுள்ளார்.

இ–20 கிரிக்கெட் அறி­மு­க­மான பின்னர் ரசி­கர்­க­ளி­டையே டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிக்­கான ஆத­ரவு படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது. மேலும், பெரும்­பா­லான போட்­டிகள் ஐந்து நாட்கள் வரை நீடிப்­ப­தில்லை. வீரர்­களும் தங்­க­ளது உடற்­த­கு­தியை ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்கு ஏற்ற வகையில் கட்­டுக்­கோப்­பாக வைப்­ப­தில்லை.

இ–20 லீக் தொடர் நடை­பெற்று வரு­வதால் பெரும்­பா­லான வீரர்கள் டெஸ்ட் போட்­டி­களை விரும்­பு­வ­தில்லை. இருந்­தாலும் பாரம்­ப­ரி­ய­மான டெஸ்ட் கிரிக்­கெட்டை இழந்து விடக்­கூ­டாது என்­பதில் முன்னாள் வீரர்கள் கவ­ன­மாக உள்­ளனர்.

இந்­நி­லையில் முதன்­மு­றை­யாக தென்­னா­பி­ரிக்க -– சிம்­பாப்வே அணிகள் மோதும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்­டியை பரி­சோ­தனை முறையில் நடத்த ஐ.சி.சி. ஒப்புதல் வழங்­கி­யுள்­ளது.

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்­டிக்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன. இந்­நி­லையில் இது குறித்து பேசி­யுள்ள இலங்கை அணியின் முன்னாள் ஜாம்­பவான் சங்­கக்­கார, நான் பெரிய ரசிகன் இல்லை என்று தெரி­வித்­துள்ளார்.

சங்கா மேலும் கூறு­கையில், டெஸ்ட் போட்டி நான்கு நாட்கள் மட்­டுமே கொண்­டது என்றால், நீங்கள் ஆஷஸ் தொடரை கற்­பனை செய்து பாருங்கள். நான்கு நாட்கள் கொண்ட போட்­டி­யின்­போது மழை குறுக்கிட்டால் பாதிப்பு ஏற்­படும்.

அதே­வே­ளை பாரம்­ப­ரியம் மற்றும் வர­லாற்றை கருத்தில் கொள்ள வேண்டும். ரசி­கர்கள் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புவதில்லை என்பதால், ரசிகர்கள் விருப்பத்திற்காக இது நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்கிறேன் என்றார்.