அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருநாட்டுக்குமிடையில் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை நிறுத்த இரு நாடுகளும் இனைந்து செயற்பட வேண்டியதன் முக்கியம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.