கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.!

Published By: Robert

02 Nov, 2017 | 08:47 AM
image

ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் வழங்­கப்­பட்­டி­ருந்த வாக்­கு­று­திக்­க­மை­வாக சாய்ந்­த­ம­ருது பிர­தே­ச­ சபையை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதனை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தற்கும் தயா­ராக இருந்தோம். எனினும் கல்­முனை மாநர சபையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக பிரிக்­கு­மாறு தற்­போது அப்­பி­ர­தேச மக்­க­ளினால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது­மக்­களின் அபிப்­பி­ராயம் பெறாது அதனை  நிறை­வேற்ற முடி­யாது. ஆகவே தற்­போ­தைக்கு கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் மேற்­கொள்­ளாது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கல்­முனை மாநா­கர சபைக்கே தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்தல் தொடர்பான் வர்த்­த­மானி அறி­வித்­தலில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா நேற்று கைச்­சத்­திட்டார். அதன் பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சாய்ந்­த­ம­ரு­துக்கு புதிய பிர­தேச சபை வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தனர். எனினும் கல்­முனை மற்றும் சாய்ந்­த­ம­ருது மக்கள் மத்­தியில் அது தொடர்பில் பல்­வேறு அபிப்­பி­ரா­யங்கள் உள்­ளன. எனவே கல்­முனை மாநாக சபையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரிக்­கு­மாறு தற்­போது கோரிக்­கை­யொன்று விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இருந்­த­போ­திலும் அதனை ஓரே­ய­டி­யாகச் செய்ய முடி­யாது. அது தொடர்பில் அப்­பி­ர­தேச அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது­மக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய பின்­னரே நட­வ­டிக்கை எடுக்க முடியும். மேலும் ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் சாய்ந்­த­ம­ருது பிர­தேச சபைக்­கான கோரிக்­கையே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்து. ஆகவே அதற்­கான பணி­களை அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருந்­த­துடன் அதனை வர்த்­த­மா­னியில் அறி­விப்­ப­தற்கும் நாம் தயா­ராக இருந்தோம்.

மேலும் சாய்ந்­த­ம­ருது பிர­தேச சபையை அமைப்­ப­தற்­கான தீர்­மானம் எடுப்­ப­தற்கு முன்னர் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள தமிழ், முஸ்லிம் கட்­சிகள் உள்­ள­டங்­க­ளாக அப்­பி­ர­தேச மக்­களின் அபிப்­பி­ரா­யங்­களைப் பெற்றே குறித்த தீர்­மா­னத்­திற்கு வந்தோம். ஏனெனில் எமது அர­சாங்கம் மக்­களின் அபிப்­பி­ரா­யத்­திற்குப் புறம்­பாக தீர்­மானம் மேற்­கொள்­வ­தில்லை.

நுவ­ரெ­லிய மற்றும் அம்­ப­முவ பிர­தேச சபை விவ­காரம் தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்ளும் அதி­காரம் எனக்­கி­ருந்­தது. எனினும் நான் அதனை அமைச்­ச­ரவை அனு­ம­தி­யு­ட­னேயே மேற்­கொண்டேன். ஆகவே கல்­முனை மாநா­கர சபையை நான்கு சபை­க­ளாக பிரிக்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் கோரிக்கை அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது மக்களின் அபிப்ராயம் பெறாது மேற்கொள்ளப்பட முடியாது.

அப்பிரதேசங்களில் எவ்வகையான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் செய்யாது கல்முனை மாநாகரசபைக்கான தேர்தலே நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04