நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது இ20 போட்டியில் அபாரமாக விளையாடி 53 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஒருநாள் தொடரை இழந்த நிலையில், மூன்று போட்டிகள் அடங்கிய இ20 தொடரின் முதல் போட்டி இன்று (1) சற்று முன் டெல்லியில் நிறைவடைந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி இந்தியாவைத் துடுப்பாட அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீரர்கள் ரோஹித் ஷர்மா - ஷிகர் தவான் ஜோடி சிறப்பான அடித்தளத்தை இட்டது. இருவரும் தலா எண்பது ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அடுத்து பாண்ட்யா ஓட்டம் பெறாமலே ஆட்டமிழந்து இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின்னர் களமிறங்கிய அணித் தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி 27 ஓட்டங்களைப் பெற்றார். டோனி சிக்ஸர் ஒன்றுடன் ஏழு ஓட்டங்கள் பெற்றார்.

20 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கட்களை மட்டுமே இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி எட்டு விக்கட்களை இழந்து 149 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியுடன் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் ஆஷிஷ் நெஹ்ரா, தனது கடைசிப் போட்டியில் எந்த விக்கட்டையும் வீழ்த்தாமலேயே கண்ணீருடன் வெளியேறினார்.