25 வருடங்களின் பின்னர் பஸ் சேவை

Published By: Robert

01 Feb, 2016 | 02:20 PM
image

யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்பட்ட, மீள்குடியேற்ற கிராமமான நெல்லூரிலிருந்து - மட்டக்களப்பிற்கு, சுமார் 25 வருடங்களின் பின்னர், இன்று காலை  பஸ் சேவை ஆரம்பமானது. 

இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் துரை.மனோகரன் தலைமையில் நெல்லூர் கிராமத்திலிருந்து இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

காலை 06.15க்கு நெல்லூரிலிருந்து ஆரம்பமாகும் இச்சேவை, நரிப்புல் தோட்டம், கரடியனாறு, மகிழவெட்டுவான் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்செல்லும். அதன் பின்னர் அவ்வழியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொது மக்களை ஏற்றிச் செல்லும், இவ் பஸ் வண்டி பகல் 1.00 மணிக்கு செங்கலடியிலிருந்து மீண்டும் நெல்லூர் சென்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும். 

பிற்பகல் 04.00 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிவரும் குறித்த பஸ்வண்டி மட்டக்களப்பிலிருந்து நெல்லூர் சென்று இரவில் அங்கு தரித்திருந்து காலையில் மீண்டும் பாடசாலை சேவையில் ஈடுபடும். 

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41