கல்குடாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இன்று  உத்தரவிட்டார்.

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற  பிராந்திய செய்தியாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும்  புண்ணியமூர்த்தி சசிகரன் மீது கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மதுபான உற்பத்திச் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.