சகோதரியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு சகோதரன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாவரல, பாரகமவில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் தற்கொலை செய்துகொண்ட அவரது இளைய சகோதரருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை குறித்த பெண்ணுக்கும் அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது திடீரென்று கோபத்துக்கு ஆளான தம்பி, தன்வசமிருந்த கத்தியை எடுத்து தன் சகோதரியைக் குத்தினார்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் அக்கா மரணமானார். இதைக் கண்டு பயந்த தம்பி, மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கொலை செய்யப்பட்டவர் ஜே.ஏ.தயாவதி (57) என்றும், தற்கொலை செய்துகொண்டவர் ஜே.ஏ.சரத் (49) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.