இந்தி பட உலகில் தற்போது வலம் வரும் சன்னி லியோனுக்கு போட்டியாக, மற்றொரு ஆபாச நடிகை களமிறங்கி இருக்கிறார்.

கனடாவில் ஆபாச படங்களில் நடித்தவர் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பொலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பொலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது பொலிவுட்டில் பெரும் நடிகையாக வலம் வருகிறார்.

சன்னி லியோனை தொடர்ந்து மேலும் ஒரு ஆபாச நடிகை இந்தியாவிற்கு வருகிறார். வெப்மாடலாக நடித்து வரும் மியா கலிபா தற்போது இந்திய திரையுலகில் வலம் வரவுள்ளார். லெபனான் நாட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர் ஆவார்.

சமீபத்தில் வெளிவந்த உமர் லுலு இயக்கிய சுங்கஷ் (Chunkzz) என்ற மலையாள அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் உமர் விரைவில் தொடங்கவுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ஹனிரோஸ், பாலுவர்கீஸ் நாயகன், நாயகியாக மீண்டும் நடிக்கவுள்ள நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆபாச நடிகை மியா கலிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2018 மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை பிரபல பொலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.