அரச மருந்தாளர்கள் சங்கம் இன்று முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். 

இதனால், நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதனை தடுக்கும் முகமாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து ஒசுசல மருந்தகங்களிலும் இலவசமாக மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், அரச வைத்தியசாலைகளின் உள் மற்றும் வெளி நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு இவ்வாறு மருந்துகள் வழங்கப்பட உள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பணிப்பின் கீழ் மேற்குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

மருந்தாளர்களுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக நடத்தப்படும் மருத்துவ மற்றும் மருந்தாளர்களுக்கான பட்டப்படிப்பை நிறுத்தியமை, இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு  காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.