கண்ணாடியில் முகம் தெரிய வேண்டுமாயின் சிரிக்க வேண்டும்

Published By: Digital Desk 7

01 Nov, 2017 | 11:43 AM
image

புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்துடனான சிரித்தால் மட்டுமே முகத்தைக் காட்டும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியுள்ளார்.

2,000 டொலர்கள் முதல் 3,000 டொலர்கள் வரையான விலையில் இந்தக் கண்ணாடி  டெப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

முக உணர்ச்சிகளைக் கண்காணித்து சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது.

குறித்த நவீன கண்டு பிடிப்பு தொடர்பாக படைப்பாளி பெர்க் இல்ஹான் கருத்து தெரிவிக்கையில்,

”எந்த கஷ்டம் வந்தாலும் அதைக்கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். அல்லது மரணமாவது தள்ளிப்போகக்கூடும்.

நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய்  வைத்தியசாலைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும், வைத்தியர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன்” என  கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26