அம்பாறை முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அம்பாறை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை பொலிசர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் பெரல்கள் மற்றும் கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களையும் பொலிஸார் மீட்டனர் .

இதனையடுத்து அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில்  நீதிவான் முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தியபோது இருவரும் குற்றத்தை ஓப்புக் கொண்டதையடுத்து ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபா வீதம் இருவருக்கும் ஒரு இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீப்பளித்தார்