இருதய சத்திரசிகிச்சை நிபுணராக கடந்த 18 வருடங்களாக  மாதாந்தம் ஒவ்வொரு கிழமையும் இந்தியாவிலிருந்து  நவலோகா வைத்தியாசாலைக்கு வருகைதரு விசேட இருதய சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றிய   (Chief Consultant Cardiothoracic, Vascular & transplant surgeon) DR. A.G. ஜெயகிருஷ்ணன்  தற்போது முழு நேர  இருதய சத்திர சிகிச்சை நிபுணராக கொழும்பில் உள்ள பிரபல வைத்தியசாலைகளில் ஒன்றான நவலோகாவில்  பணியாற்றுகிறார். 

தனது அனுபவத்தில் அதிகளவிலான இருதய சத்திர சிகிச்சையை சிறந்த முறையில்  செய்து வரும் இவரை அண்மையில் வைத்தியசாலையில் சந்திக்கும் வாய்ப்பொன்று கிடைத்தது. 

இதன்போது இருதய சத்திரசிகிச்சை  தொடர்பாக அவருடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக இருதய சத்திர சிகிச்சை விசேட நிபுணரான நீங்கள் வருகை தரு வைத்தியராக இருந்து தற்போது  இங்கு நிரந்தரமாக பணியாற்றுகின்றீர்கள். உங்களது இந்த அனுபவம் பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இருதய சத்திர சிகிச்சையில் மிகவும் பழமை வாய்ந்த நவலோகா வைத்தியசாலை இருதய சிகிச்சைக்கான அதிநவீன ரக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வைத்தியசாலையாக இருக்கின்றது. சிறுவர்கள் உட்பட பெரியோர்களுக்கான இருதய கிசிச்சை, சத்திர சிகிச்சை முறைமையை கொண்டியங்குகின்றது.  கடந்த பல வருடங்களாக விசேட வருகைதரு நிபுணராக இருந்து தற்போது  முழுநேரமாக இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கும் அதேவேளை அறுவை சிகிச்சையையும் மனத்திருப்தியுடன் செய்து வருகின்றேன். 

இலங்கையில் நீண்டகாலமாக இருதய சிகிச்சை, அறுவை சிகிச்சையாளர்களை சந்தித்திருப்பீர்கள். எவ்வாறான தன்மையுடைய இருதய நோயாளர் களை இனம் கண்டுள்ளீர்கள்?

பலதரப்பட்ட இருதய நோய்களுடன் வருபவர்களை சந்தித்துள்ளேன். பெரியோர், சிறியோருக்கான  இருதய நோய்கள் வித்தியாசமானவை. பெரும்பாலான சிறுவர்களுக்கு பிறப்பிலேயே இதய பாதிப்பு இருக்கும். அவ்வாறானவர்களை  பிறப்பிலேயே அடையாளம் காணும் போது அவர்களுக்கான சத்திரசிகிச்சை யையும் செய்து விடுவோம். 

வயது வந்த பெரியவர்களுக்கு  இதய வால்வு நோய் (heart valve disease), இது தொற்றாக இருந்தாலும் பொதுவானது. மற்றது இதய அடைப்பு (Heart Block)  

இதய அடைப்பு (Heart Block)  

வாழ்க்கை முறைமையே (Life style) இதய அடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணியாக உள்ளது. அதிகளவான கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் (hypertension), மன உளைச்சல் (stress), நவீன முறையிலான வாழ்க்கை முறைமை போன்ற பல காரணங்கள் இதய அடைப்புக்கு காரணமாக அமைகின்றன.  இவ் இருதரப்பினரையும் சந்தித்துள்ளேன். அவர்களுக்கு சிகிச்சையையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளேன. இது இலங்கையில்  மாத்திரம் அல்ல.   தெற்காசிய நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவற்றில் இவ்வாறான பிரச்சினை இருக்கின்றது. 

சிறு  பிள்ளைகளுக்கான  இருதய  சத்திர சிகிச்சையை செய்துள்ள நீங்கள் அவர்களுக்கு இருதயத்தில் பிரதான பிரச்சினை என எதனை அடையாளம் கண்டீர்கள்?

 பிறப்பில் இருந்தே இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை இனம் கண்டு தேவைக்கேற்ப சிகிச்சை வழங்குவோம். சில குழந்தைகளுக்கு பிறப்பிலேயே இருதயத்தில்  சிறிய ஓட்டை  இருக்கும் இவ்வாறான  நிலையில் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது. சிறிய பிள்ளைகளுக்கு  இருதய சிகிச்சை செய்வது என்பது மிகவும் சிக்கலான விடயம்.  இதன் போது, விசேட நிபுணர்கள், தாதியர்களைக் கொண்டு சிகிச்சைகளை செய்கின்றோம். 

எமது மூதாதையர் காலத்தை விட தற்போது இருதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இதற்கு காரணங்கள் இருக்கின்றன. முன்புள்ள வாழ்க்கை முறை சிறப்பானது. சுற்றுச்சூழல்  சூழல் மாசு குறைவாக இருந்த காலத்தில் இவ்வாறான இருதய தாக்கம் என்பது வலு குறைவு.  அத்துடன் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி போன்ற இன்னோரன்ன விடயங்கள் இப்பாதிப்பிலிருந்து காப்பாற்றின. ஆனால், இந்த காலம் முன்னைய காலத்தைவிட எதிர் மாறானது என்றேகூறலாம். சூழல் மாசு, உடல் உழைப்பின்மை, உடனடி தயார் உணவுகள் போன்ற நிலைமைகள் நெஞ்சடைப்பு வருவதற்கு ஏதுவாக அமைந்துவிடு கின்றது.

நெஞ்சு வலிகளை அடிப்படை அறிகுறி  என்ன?

ஒவ்வொருவருக்கும் அதன் அடிப்படை அறிகுறிகள் வித்தியாசமானவை. சிலருக்கு இடது கைமேற்பகுதியில் அறிகுறி தென்படும். சிலநேரங்களில்  வயிற்றுப் பகுதியில்  இருந்தும் அறிகுறி தென்படும். சிலருக்கு நடை, உடற்பயிற்சியின் போதும் கூட நெஞ்சுவலி ஏற்படலாம். அவ்வாறு ஏற்படுமாயின் பயிற்சிகளை அத்தருணத்தில் தவிர்த்து வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எல்லோருக்கும்  இந்த அறிகுறி தெரிவதில்லை. ஒவ்வொருவரின் உடல் தன்மையைப் பொறுத்தே வேறுபடும்.

 நீரிழிவு உள்ளவர்கள், நெஞ்சு வருத்தம் இருந்தாலும், இதனை உணர்ந்து கொள்ள முடியாதிருக்கின்றனர். வலி வந்தால் மாத்திரமே வைத்தியரிடம் செல்கின்றனர்.    இப்போது 25 வீதமானவர்கள் தமக்கு நெஞ்சுவலி இருக்கின்றது என்பதன் அடிப்படை அறிகுறி தெரியாமலேயே இருந்து விடுகின்றனர். இறந்தும் விடுகின்றனர். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது , உடற்பயிற்சி செய்யும் போது,  நடக்கும் போதும் கூட சிலர் நெஞ்சடைப்பு வந்து இறந்து விடுகின்றனர். 

இதுவே நெஞ்சடைப்புக்கான  முதலாவது அறிகுறியாகவும் சிலருக்கு அமைந்து விடுகின்றது. உட்கார்ந்திருக்கும் போது இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.  ஓடும் போதும், வேகமாக நடக்கும் போதும்,  சோர்வு, மன அழுத்தம் ஏற்படும் போதும் நெஞ்சு பகுதியில்   போதியளவு இரத்தம் செல்ல இயலாத  சந்தர்ப்பத்தில் நெஞ்சுவலி ஏற்படுகின்றது. இதுவே அடைப்புக்கும் வழி வகுக்கின்றது. 

சத்திரசிகிச்சை செய்வதாயின் குறைந்தபட்சம் எத்தனை அடைப்புகள் இருக்க வேண்டும்? 

பொதுவாக நான்கு அடைப்புகள் இருந்தால் மாத்திரம் இருதய சத்திர சிகிச்சையில் ஈடுபட வேண்டும். 

இருதய சத்திரசிகிச்சை எத்தனை காலத்திற்கு செல்லுபடியாகும்? 

இருதய சத்திரசிகிச்சையின் பின்னர்  15-–20 வருடங்கள் ஆரோக்கியமாக எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறு இருக்க வேண்டுமானால் வைத்திய ஆலோசனைப்படி உணவு கட்டுப்பாட்டுடன் , உரிய பயிற்சியுடன் இருக்க வேண்டும்.   மருந்து, உணவு, உடற்பயிற்சி அவசியம்.  அவதானமாக இருக்க வேண்டும். மாற்று சிகிச்சை செய்த பகுதியில் கொழுப்பு , நீரிழிவு,  உயர் இரத்த அழுத்தம் என்பவற்றை  கட்டுப்படுத்தா விட்டால் குறிப்பிட்ட காலப்பகுதியை விடுத்து கூடிய விரையில்  அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.  ஆகையால் சிகிச்சையின் போது வைத்திய ஆலோசனைப்படி செயற்படுதல் அவசியம். 

Castric மூலம் வரும் நெஞ்சுவலிக்கும் சாதார ணமாக வரும் நெஞ்சுவலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது பற்றி கூற முடியுமா?

இதுவொரு பொதுவான விடயம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.   நெஞ்சுவலி வயிற்றுப்பகுதியில் வலி ஏற்ப டும் அறிகுறியும் இருக்கின்றது.  ஆகையால் castric வலி என்று இருந்துவிடாமல் வைத்தியரை அணுகுவது சிறந்தது. தவறான மருந்துகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.