இந்­தி­யா­வுக்கு எதி­ராக இம்­மாத இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்று வகை­யான கிரிக்கெட் தொட­ர்களுக்­கான இலங்கை அணியில் அனு­பவ வீரர்­க­ளான அஞ்­சலோ மெத்­தியூஸ், குசல் ஜனித் பெரேரா மற்றும் அசேல குண­ரத்ன ஆகியோர் இணைந்­து­கொள்­வார்கள் என இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஆஷ்லி டி சில்வா தெரி­வித்தார்.

இலங்கை அணி பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான தொடர்களில் டெஸ்ட் தொடரில் மாத்­தி­ரமே வெற்­றி­பெற்­றது. ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 தொடர்­களில் வைட் வொஷ்­ஷா­னது. 

இந்த நிலையில் காயத்­தினால் போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருந்த இந்த மூவரும் அணியில் இணைந்­து­கொள்­வது இலங்­கைக்கு பல­மாக அமையும். 

அதே­வேளை இந்­தி­யா­வுக்கு எதிரான தொடர் இலங்கைக்கு கடுமையாக அமையும் என்பதால் இவர்கள் அணிக்கு திரும்ப வேண்டியது கட்டாயமாகவும் கருதப்படுகிறது.