பிர­பா­கரன்  உயி­ருடன் இருக்­கையில் தற்­போது தேசப்­பற்­றுள்­ள­வர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி ஆர்ப்­பாட்டம் செய்­ப­வர்கள்  தேசத்­துக்­காக முன்­வ­ராமல் ஓடி ஒளிந்து மறைந்­தி­ருந்­தனர். ஆனால் பிர­பா­கரன் உயி­ரி­ழந்த பின்னர் தேசப்­பற்­றா­ளர்கள் என கூறிக்­கொண்டு கூலி பணத்­திற்கு போராட முன்­வந்­துள்­ள­தாக தெரி­வித்த பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா,

யுத்­த­கா­லத்தின் போது உயி­ருக்கு அஞ்சி எனக்கு தொலை­பேசி அழைப்பு விடுத்து கொண்டு இருப்­பவர் தற்­போது பாரா­ளு­மன்­ற­த்­திற்கு குண்­டு­போட போகின்­றாராம்.  வர­லாற்றில் இவ்­வாறு கதைத்­த­வர்­களின் உடல் இனங்­காண முடி­யாமல் துண்டு துண்­டாக சித­ற­டிக்­கப்­பட்­டு­விட்­டது. இதன்­படி அவரும் அதனைத் தான் விரும்­பு­வது போல் தெரி­கின்­றது என்றும் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு சபை நேற்று செவ்­வாய்க் ­கி­ழமை இடைக்­கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

எமது நாட்டில் இடைக்­கி­டையே பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. யுத்தம் ஏற்­பட்­டது. அதே­போன்று தெற்கில் வேறு பிரச்­சி­னை­களும் காணப்­பட்­டன. யுத்­தம் இரா­ணுவ வீரர்­க­ளினால் நிறை­வு­செய்­யப்­பட்­டது. எனினும் தற்­போது யுத்த வெற்­றிக்கு உரிமை கோரு­ப­வர்கள் அதற்­காக எத­னையும் செய்­ய­வில்லை. யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் நாம் முடிவு செய்தோம். நாட்டில் நல்­லி­ணக்கம் அவ­சியம் என தீர்­மா­னித்தோம். எனினும் இன­வா­திகள், ஊழல் மோச­டிக்­கா­ரர்கள் இதற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக இல்லை. பிர­பா­கரன்  நாட்டை பிள­வு­ப­டுத்த முற்­பட்ட போது தேசப்­பற்­றுள்­ள­வர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி கொண்டு தற்­போது செயற்­ப­டு­ப­வர்கள் தேசத்­துக்­காக முன்­வ­ராமல் ஓடி ஒளிந்து மறைந்­தி­ருந்­தனர். ஆனால் பிர­பா­கரன் உயி­ரி­ழந்த பின்­னரே தேசப்­பற்­றா­ளர்கள் என கூறி போலி வேடம் போடு­கின்­றனர்.

இலங்­கையின்  பெரும்­பான்மையினத்த வர் சிங்­க­ள­வர்கள் என்­பதில் எந்த சந்­தேக மும் கிடை­யாது.என்­றாலும் ஒரு இனம் மற்­றொரு இனத்தை அடி­மைப்­ப­டுத்த முடி­யாது. அனைத்து இனங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.  

யுத்­தத்தின் பின்னர் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். அத்­துடன் அவர்­க­ளது நம்­பிக்கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். தற்­போது அதற்­கான பொறுப்பு எமக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் யுத்­தத்தின் போது கைது­செய்யப்பட்டவர்களுக்கு எந்­த­வொரு சித்­தி­ர­வ­தை­க­ளையும் செய்­ய­வில்லை. அவர்­க­ ளுக்கு இரா­ணு­வத்­தி­னரால் மருந்து, சாப்­பா­ டு­களை வழங்­கினோம். அவர்­க­ளுக்கு புனர்­வாழ்வும் அளித்தோம். எனினும் சில இரா­ணுவ வீரர்­க­ளினால் அநி­யா­யங்கள் நடந்­தன. இதனால் எமக்கே அது பாதிப்­பாக வந்­துள்­ளது. இவர்கள் ஆட்­சி­யா­ளர்­களின் கட்­ட ளைபடி செயற்­பட்­ட­வர்­க­ளாவர். 

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக இடைக்­கால அறிக்கை சமர்­ப்பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும். அர­சியல் இலாபம் தேடு­வ­தற்கு இது தருணம் அல்ல. நாட்டின் நலனை மறந்து ஒரு சிலர் செயற்­ப­டு­கின்­றனர். நேற்று (நேற்­று­முன்­தினம்) அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக ஒரு சிலர் ஆர்ப்­பாட்டம் நடத்­தினர். யுத்தம் நடந்து கொண்­டி­ருந்த போது பிர­பா­கரன் நாட்டை பிள­வு­ப­டுத்தும் போது நாட்டின் மீது இவர்­க­ளுக்கு அக்­கறை இருக்­க­வில்லை. தற்­போது கூலி பணத்­திற்­காக ஆர்ப்­பாட்டம் செய்­கின்­றனர். எனவே இவர்­க­ளுக்கு அஞ்சி நாம் எமது பய­ணத்தை நிறுத்த மாட்டோம். தொடர்ந்து பய­ணிப்போம்.

இடைக்­கால அறிக்கை தொடர்பில் பலர் விமர்­சிக்­கின்­றனர். இந்த அறிக்­கையில் பெளத்த மத வளர்ச்­சிக்கு உரிய இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது. கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் சிங்­கள மக்­களை திசை­தி­ருப்ப முற்­ப­டு­கின்­றனர். ஒற்­றை­யாட்சி, நாட்டைப் பிள­வு­ப­டுத்த முடி­யாது என கூறப்­பட்­டுள்­ளது. இதன்­படி தனி­நாடு என்­பது மாயை­யாகும். மக்­களின் மூளைக்கு விஷம் ஏற்ற முற்­ப­டு­கின்­றனர். பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை உள்­ளது. ஏனைய மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கி­யுள்ளோம். ஒற்­றை­யாட்­சியில் அச்­சு­றுத்தல் என்றால் அதனை இல்­லாமல் செய்ய பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இறை­மை­யையும் பிள­வு­ப­டுத்த முடி­யாது என்றும் கூறப்­பட்­டுள்­ளது. மாகாண சபை­களின் அதி­கா­ரத்தை ஜனா­தி­பதி கொண்­டுள்ளார். அத்­துடன் நாட்டில் ஒரு பொலிஸ் துறையே இருக்கும். ஒரு பொலிஸ் மா அதி­பரே இருப்பார். எனினும் மாகாண மட்­டத்தில் பொலிஸ் பிரிவு இருக்கும். 

இந்­நி­லையில் வீர­வ­சனம் பேசக் கூடி­ய­வர்கள் 2005 பின்னர் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக எதுவும் பேச முடி­யாது. பேசினால் கடு­மை­யான அச்­சு­றுத்­தலே வரும். அந்தக் காலத்தின் போது அமைச்­சர்கள் எவரும் சுய­மாக பேச­மு­டி­யாது. முன்­னைய ஆட்­சியின் போது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது. எனது வழக்கை விசா­ரித்த சட்­டத்­த­ர­ணி­களை நீதி­ப­தி­க­ளாக மாற்­றினர். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஒரு குடும்பம் நிர்­வ­கித்து வந்­தது. இரா­ணு­வத்தில் சேர்ந்த ஆட்­சி­யா­ளரின் மகன் செய்­தது ஒன்­று­மில்லை. எனினும் மக­னுக்கு தந்­தையை விட பாது­காப்பு இருந்­தது. மிஹின்­லங்கா மூலம் நாடு நஷ்­ட­ம­டைந்­தது. வசிம் தாஜூதீன் கொலை செய்­யப்­பட்டார். அந்த வழக்கு இன்னும் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் நாட்டில் ஜனா­தி­பதி முறைமை இருக்­கக்­கூ­டாது என தீர்­மானம் எடுத்­துள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் இந்த நிலைப்­பாட்டை மதிக்­கிறேன். எனினும் ஜனா­தி­பதி முறைமை இருக்க வேண்டும் என்­பதே எனது நிலைப்­பா­டாகும். அது நாட்டின் பாது­காப்­புக்கு சிறந்­த­தாக அமையும்.

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் விமர்­ச­னங்­க­ளுக்கு ஏமாற்றம் அடைந்து செயற்­படும் பிக்­கு­க­ளுக்கு நாம் இட­ம­ளிக்க மாட்டோம். பிர­பா­கரன் இருக்கும் போது எவரும் முன்­வ­ர­வில்லை. மேலும் யுத்த காலத்தின் போது உயிருக்கு அஞ்சி எனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துக் கொண்டு இருப்பவர் தற்போது பாராளுமன்றத்திற்கு குண்டு போட போகின்றாராம்.  இவ்வாறு கதைத் தவர்களின் உடல் இனங்காண முடியாமல் துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டு விட் டது. இதன்படி அவரும் அதனைத் தான் விரும்புகின்றார் போல் தெரிகின்றது. 

அரசியலமைப்பை ஆதரிப்போரை கொலை செய்வதாக இராணுவத்தில் இருந்த ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் ஒழுக்கமானவர்கள் அல்ல. இவர்களின் செயற்பாடுகளினால் தான் பிரச்சினைகளும் எழுந்துள்ளன என்றார்.