வெளிப்­ப­டுத்த முடி­யாத இலக்­கங்கள் மூலம் 30 மில்­லியன் ரூபாவை சம்­பா­தித்­த­தாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்புச் சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ மற்றும் கவர்ஸ் கோப்­ரடீஸ் சேர்­விசஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ளர்கள் நால்­வ­ருக்கு எதி­ரான வழக்கு அடுத்த வருடம் பெப்­ர­வரி மாதம் 16 ஆம் திகதி முதல் விசா­ரணை செய்­யப்­ப­ட­வுள்­ளது. நேற்று இது தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி பிய­சேன ரண­சிங்க முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்தபோதே நீதி­பதி இதனை அறி­வித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் முதலாம் திக­திக்கும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் கொழும்பில் வைத்து, அறி­யாத பல­ருடன் சேர்ந்து சதித்­திட்டம் தீட்டி சம்­பா­தித்­ததை  தெளி­வு­ப­டுத்த முடி­யாத வகையில் 30 மில்­லியன் ரூபாவை சம்­பா­தித்­ததன் ஊடாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­தமை, அதற்கு உதவி புரிந்­தமை உள்­ளிட்ட 11 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் நாமல் ராஜ­பக் ஷ உள்­ளிட்ட ஆறு பேருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது.

இந்த கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு வழக்கில் முதல் பிர­தி­வா­தி­யாக நாமல் ராஜ­பக் ஷ பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில் 2, 3 ஆம் பிர­தி­வா­தி­க­ளாக இந்­திக பிரதாப் கரு­ணா­ஜீவ, சுஜானி போகொல்­லா­கம ஆகி­யோரும் 4 ஆம் பிர­தி­வா­தி­யாக ஒரெ­னெல்லா இரேஷா சில்­வாவும் 5 ஆம் பிர­தி­வா­தி­யாக  நித்­திய சேனானி சம­ர­நா­யக்­கவும் 6 ஆவது பிர­தி­வா­தி­யாக வரை­ய­றுக்­கப்­பட்ட கவர்ஸ் கோப்­ரடீஸ் சேர்­விசஸ் தனியார் நிறு­வ­னமும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. நேற்­றைய விசா­ர­ணையின் போது இந்­திக கரு­ணா­ஜீவ தவிர ஏனைய பிர­தி­வா­திகள் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

 இந் நிலையில் பிர­தி­வா­தி­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட வேண்­டிய ஆவ­ணங்­களை எதிர் வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கையளிக்க தீர்மானித்த நீதிவான், அடுத்த கட்ட வழக்கு விசாரணைகள் அடுத்த வரு டம் பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் இடம் பெறும் எனவும் அறிவித்தார்.