அச்­ச­மின்றி வியா­பா­ரிகள் தமது வியா­பார நட­வ­டிக்­கையில் ஈடு­பட முடியும். இன விரி­சலை ஏற்­ப­டுத்த முற்­ப­டு­ப­வர்கள் மீது கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்­தார்.

கிரான் மற்றும் செங்­க­லடி போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள சந்­தை­களில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலை தொடர்­பாக ஆராயும் கூட்டம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏறாவூர் நகர சபை மண்­ட­பத்தில் நடை­பெற்ற போது கருத்து தெரிவிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் மற்றும் ஏறாவூர் பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன தலைவர் மௌலவி எம்.எல்.எம்.வாஜித் உட்­பட சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள்,ஏறாவூர் பள்­ளி­வாயல் சம்­மே­ளன பிரதி நிதிகள் மற்றும் பாதிக்­கப்­பட்ட வர்த்­த­கர்கள், வர்த்­தக சங்க பிரதி நிதிகள், ஊர் பிர­மு­கர்கள்,புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்ட பலர் இந்தக் கூட்­டத்தில் கலந்து கொண்­டனர்,

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி, இனங்­க­ளி­டையே விரி­சல்­களை ஏற்­ப­டுத்த முனையும் விஷ­மி­களை விரைவில் அடை­யா­ளங்­கண்டு சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்னெடுத்து வரு­கின்றோம்.

இந்த இன முறு­கலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர்கள் மற்றும் அதற்கு தூண்­டி­ய­வர்­களை நாம் அடை­யாளம் கண்டு அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி கடும் சட்ட நட­வ­டிக்கை எடுப்போம்.

முஸ்லிம் வியா­பா­ரிகள் அச்­ச­மில்­லாமல் தொடர்ந்து தமது வழ­மை­யாள செயற்­பாட்டில் ஈடு­பட முடியும். தேவை­யான அனைத்து பாது­காப்பு ஒழுங்­கு­க­ளையும் நாம் செய்­துள்ளோம்.

குறித்த பிரச்­சினை சிலரின் தனிப்­பட்ட அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளவையாகும். இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் அப்­பாவி மக்­களும் வர்த்­த­கர்­க­ளுமே பாதிக்­கப்­ப­டு­கின்றனர் என்றார்.

இதன் போது கிரான் சந்­தையில் முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு வியா­பாரம் செய்­வ­தற்கு எதி­ராக சில விஷ­மி­களால் முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் மற்றும் வாழைச்­சேனை ஆட்டோ தரிப்­பிடம் தொடர்பில் ஏற்­பட்ட பிரச்­சி­னைகள் தொடர்பில் இதன் போது மக்­களால் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது,

இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் இவ்­வா­றான பிரச்­சி­னை­களை இனப்­பி­ரச்­சி­னையாக உரு­வெ­டுக்க ஒரு போது இட­ம­ளிக்கக் கூடாது 

அத்­துடன் தமிழ் முஸ்லிம் சமூ­கங்கள் இவ்­வா­றான நேரத்தில் மிகவும் சுமு­க­மான முறையில் நிதா­ன­மாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு சில சதி­கா­ரர்­களின் துர்­நோக்­கங்கள் நிறை­வே­று­வ­தற்கு நாம் கார­ண­மாக இருந்து விடக்கூடாது 

பல இடங்களில் முஸ்லிம் வர்த்தகங்களுக்கு எதிராக தடைவிதிக்கும் வகையில் வன்முறைகளிலும் சிலர் ஈடுபட்டு வருவதை தடுக்கும் வகையில் பொலிஸார் மாவட்ட மட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.