ஜப்பானில், ஒன்பது பேரின் துண்டாடப்பட்ட உடல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்படி உடல் துண்டங்கள் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

டோக்கியோவை அடுத்துள்ள ஸாமா என்ற நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

23 வயதான இளம் பெண் இம்மாத முற்பகுதியில் காணாமல் போயிருந்தார். இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன் பேரில் விசாரணை நடத்தியபோது, கைது செய்யப்பட்ட நபருடன் காணாமல் போன இளம்பெண் ஒரு குடியிருப்புப் பகுதிக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தக் குடியிருப்பில் உள்ள சந்தேக நபரின் வீட்டை பரிசோதனையிட்டபோதே விவரம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 27 வயதுடைய சந்தேக நபரின் வீட்டில் ஒன்பது குளிரூட்டிகள் காணப்பட்டதாகவும், அவற்றில் ஒன்பது பேரின் உடல் பாகங்கள் துண்டாடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்தவர் சந்தேக நபரா அல்லது கொலைகாரர்களுக்கு உதவியவரா, கொலைகளுக்குக் காரணம் என்ன என்பன குறித்து பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.