(எம்.எப்.எம்.பஸீர்)

 இஸ்லாம் மதம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளியிட்டு நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் நடந்துகொண்டமை தொடர்பில் கைதாகி பிணை வழங்கப்பட்டிருந்த , தீவிர அடிப்படைவாத கருத்துக்களை உடைய நபராக அறியபப்டும் டொன் பிரியசாத் என்பவரின் பிணையை கோட்டை நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. 

பிணை நிபந்தனையான, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த கருத்துக்களையும், நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்பதை டொன் பிரியசாத் மீறியுள்ளதாக, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கோட்டை நீதிவான் லங்க ஜயரத்னவிடம் அறிவித்தைத் தொடர்ந்து நீதிவான் இந்த பிணை அனுமதியை ரத்து செய்தார்.

இந் நிலையில் முஸ்லிம்கள், இஸ்லாந்துக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை தெரிவித்து இனக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றமை தொடர்பில் டொன் பிரியசாத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

 எவ்வாறாயினும் ஏர்கனவே கல்கிசை பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் மீது தாக்குதல் நடாத்தி குழப்பத்தை ஏர்படுத்தியமை தொடர்பில் ஏற்கனவே டொன் பிரியசாத் விளக்கமறியலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந் நிலையிலேயே மற்றொரு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.