மொனராகலை சிறைச்சாலையினுள் கைதியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை வளாகத்தினுள் உள்ள கழிவறை ஒன்றினுள் தூக்கிட்டே தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவருகிறது.

தற்கொலை செய்துகொண்டவர் பிபிலையைச் சேர்ந்த நாற்பத்தைந்து வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.