பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில்  வசித்துவரும் தனது 80 வயது மகனை பராமரிக்கும் பொருட்டு 98 வயது தாயார் அதே முதியோர் இல்லத்தில் சென்று தங்கியுள்ளார்.

குறித்த  முதியோர் இல்லத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து 80 வயதான டோம் வசித்து வருகிறார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாத டோமுக்கு தினமும் காலை வணக்கம் சொல்லவும், உணவு தயாரானதும் சென்று கூப்பிடவும், அவருக்கு யாரும் இல்லை என்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக Ada Keating  என்ற டோமின் 98 வயது தாயார் தெரிவித்துள்ளார்.

எப்போதெல்லாம் தாம் வீட்டை விட்டு வெளியே செல்கின்றேனோ அப்போதெல்லாம் டோம் தமக்காக காத்திருந்ததாகவும், தாம் வீட்டுக்கு வந்த அந்த நொடி ஓடி வந்து தம்மை இறுக்கமாக அணைத்து அன்பை வெளிப்படுத்துவார் எனவும்  வயோதிப தாய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முதியோர் இல்லத்தில் அனைவரும் தமது தாயாரை அன்புடன் கவனிப்பதாக கூறும் டோம், சமயங்களில் தமது தாயார் தம்மை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதெல்லாம் அடாவின் பேரப்பிள்ளைகளும் தவறாமல் வந்து டோமையும் அடாவையும் சந்தித்துவிட்டு செல்கின்றனர்.