வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 2000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை  இன்று வழங்கப்பட்டது.

Dual citizenship
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

“ வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும் நல்லிணக்கத் திட்டம் ” என்ற தொனிப்பொருளில் இவ்வாறு 2000 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டது.
 
1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் இதுவரையில் 40 000 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்து. 
இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
இதற்கு முன்னர் நடைபெற்ற இரு விழாக்களின் போது சுமார் 600 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.