அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோரை கொழும்பு மேல்நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறி, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த 10ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமைக்காக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று  கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.