சுப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ 2 பொயிண்ட் ஓ ’ படத்தின் வெளியிடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், பொலிவுட் வசூல் சக்கரவர்த்தி நடிகர் அக்சய் குமார், ஆங்கில தேவதை எமி ஜேக்சன், ஓஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் பிரம்மாண்ட பட தயாரிப்பு நிறுவனம் லைகா ஆகியோர் இணைந்து இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரான 2 பொயிண்ட் ஓ படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா அண்மையில் டுபாயில் மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் தன்னுடைய இணையப்பக்கத்தில் ஒரு செய்தியை நடிகர் அக்சய்குமார் உறுதி செய்திருக்கிறார். அவர் நடித்து வரும் பாட்மேன் (Padman)  என்ற படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதியன்று வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். இவர் கதையின் நாயகனாக நடித்த பாட்மேன் படம் 26 ஆம் திகதியன்று வெளியானால், இவர் வில்லனாக நடித்திருக்கும் 2பொயிண்ட் ஓ படம் அன்று வெளியாகாது என்று தெரியவருகிறது. அதனால் 2 பொயிண்ட் ஓ படம் வேறு திகதிகளில் வெளியாகலாம் என்கிறார்கள் திரையுலகினர்.

இது ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது. 

தகவல் : சென்னை அலுவலகம்