நடிகர்  விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கருணாநிதியின் கொள்ளுபேரன் மனு ரஞ்சித்திற்கும் நேற்று காலை 10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு மணமகள் அக்ஷிதாவும், மணமகன் மனு ரஞ்சித்தும் கால பத்து மணியளவில் வந்தடைந்தனர். பின்னர் இருவரும் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் தமிழ் முறைப்படி கருணாநிதி இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் என குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்குபற்றினர்.

உடல் நலக்குறைவால் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டிற்கு பின்னர் பங்குபற்றும் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர் வாசலுக்கு வந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரை பார்த்து உற்சாகமாக கையசைத்து, மகிழ்ச்சி தெரிவித்தார்.

தகவல் : சென்னை அலுவலகம்