வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றநிலைமை நிலவிவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று இடம்பெறவிருந்த வேளையிலேயே திடீரென பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

எனினும் இளைஞர்களினால் மேற்கொள்ளப்படவிருந்த குறித்த  ஆர்ப்பாட்டம் போராட்டம் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.