சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது உறுப்பினர்களுக்கு பூப்பந்து விளையாட்டு போட்டியினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதில் ஆண்களுக்கு இரட்டையர் பிரிவிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒற்றையர் பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றன. 

அறுபத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

ஆண்கள் பிரிவில் அப்துல் காதர்  மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முதல் பரிசையும், ஸ்ரீனிவாசன்  மற்றும்  சரவணன் ஆகியோர் இரண்டாம் பரிசையும் அருண் மற்றும்  சசி ஆகியோர் மூன்றாம் பரிசையும் தட்டிச்சென்றனர்.

பெண்கள் பிரிவில் செல்வரதி மீனாட்சி சுந்தரம் முதல் பரிசையும், சுசேதா சுதந்திரம் ராமதாஸ் இரண்டாம் பரிசையும், தேவி சரவணன் மூன்றாம் பரிசையும் தட்டிச்சென்றனர்.

குழந்தைகள் பிரிவில் திவ்யா சிங்காரவேலன் முதல் பரிசையும், கெளதம் ஸ்ரீனிவாசன் இரண்டாம் பரிசையும், நிதீஷ் ராமதாஸ் மூன்றாம் பரிசையும் தட்டிச்சென்றனர்.

இந்த போட்டியினை செயலாளர் சங்கர் ராமாதாஸ் மற்றும் ஏற்பாட்டு குழுத் தலைவர் கலியபெருமாள் முரளி உடன் கார்த்திக் ஜெகதீசன் முற்றும் ஸ்வர்ணா வீரப்பன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரில் கடந்த 1998 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக நிறுவப்பெற்றது. இந்த அமைப்பு ஆண்டு தோறும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இது தற்போது 750 உறுப்பினர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.