அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ட்ர்ன்புல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கிடையிலான 70 வருட நட்புறவினை முன்னிட்டே அவரின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது.

எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ட்ர்ன்புல் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.