கென்ற் விளையாட்டுக்கழகம்  17 ஆவது வருடமாக நடத்திவரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் முக்கிய அம்சமாக இவ்வருடம் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

10 அணிகள் பங்குபற்றும் KPL - T 20 போட்டித் தொடருக்கான கிண்ணம் வத்தளை சென்.அன்ரனீஸ் விளையாட்டு மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதான வீதி சம்பத் வங்கிக் கிளையின் முகாமையார் ரமணன் மற்றும் சிட்டி பெயின்ட் உரிமையாளர் கணேசன், கென்ற் விளையாட்டுக்கழத் தலைவர் பிரபா உள்ளிட்ட கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள அணிகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கடினப்பந்து கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்  இடம்பெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும்.