கொழும்பு சென். ஜோசப் கல்லூரி நாடு பூராகவும் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தி 5 பேர் கொண்ட “வுட்செல்” (Futsal) கால்ப்பந்தாட்டப் போட்டியில் 17 வயதுப் பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் வெற்றிபெற்று 2017 ஆம் ஆண்டுக்கான கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டன.

இப் போட்டித் தொடர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி கைதானத்தில் இடம்பெற்றது.

17 வயதுப் பிரிவு போட்டியின் அரையிறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தேசிய சம்பியனான மருதானை ஸாகிரா கல்லூரி அணியைவெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் 17 வயதுகுக்குட்பட்டவர்களுக்காக இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி, தன்னை எதிர்த்தாடிய நீர்கொழும்பு சென்.மேரிஸ் கல்லூரி அணியை 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக டைனியன், டிலுக்ஷன் மற்றும் சம்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் போட்டனர்.

இதேவேளை, 19 வயதுப் பிரிவினருக்கான அரையிறுதிப் போட்டியில் கொழும்பு புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியை வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, இறுதிப்போட்டியில் கொழும்பு நாலந்தா கல்லூரி அணியை 2-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பாக திரீசன், அபிசன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் போட்டனர்.

இப் போட்டித் தொடரில் 36 பாடசாலை அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.