பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர உள்ளிட்ட 31 பேரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இன்று மீண்டும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.