ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் நீதியமைச்சர் தலதா

Published By: Robert

30 Oct, 2017 | 10:50 AM
image

இலங்கை ஜன­நா­யக சோஷலிச குடி­ய­ரசு மற்றும் ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு நாடு­க­ளுக்­கி­டையில் தண்­டனை விதிக்­கப்­பட்ட சிறைக்­கை­தி­களை பரி­மாற்­றம் செய்து கொள்­வது தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­துக்கு நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள கடந்த 27ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை நீதி அமைச்சில் கைச்­சாத்­திட்­ட­தாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக நீதி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில்  சிறைக்­கை­திகளை பரி­மாற்­றம் செய்து ­கொள்வது சம்பந்­த­மாக ஏற்­ப­டுத்­திக்­கொண்ட ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் நிகழ்வு கடந்த வெள்­ளிக்­கி­ழமை  இடம்­பெற்­றது. இந்த ஒப்­பந்­தத்­துக்­காக ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு சார்பில் அந்­நாட்டு நீதி அமைச்சர் அலி ராஸா அவாசி அந்­நாட்டில் இருந்து கைச்­சாத்­திட்­டுள்ளார். அத்­துடன் இலங்கை சார்பில் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள கைச்­சாத்­திட்டார்.

அத்­துடன் நீதி அமைச்சர் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­ட­த­னை­ய­டுத்து இலங்­கைக்­கான ஈரான் தூதுவர் மொஹமத் ஸாரி அமி­ரானி மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆகி­யோ­ருக்­கி­டையில் கைச்சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்தம் பரிமா­றிக்கொள்­ளப்­பட்­டது. இதே­வேளை,  சிறைக்கை­தி­களை பரி­மாற்­றம் செய்து ­கொள்ளும் இந்த ஒப்­பந்­தத்தின் மூலம் சிறைக்­கை­தி­க­ளுக்கு விடு­தலை கிடைப்­ப­தில்லை. மாறாக இந்த கைதி­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தண்­டனையை அதே அடிப்­ப­டையில் தங்­களின் தாய் நாட்டில் சிறைச்­சா­லை­களில் அனு­ப­விக்­க­வேண்­டி­வரும் என நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது. அத்­துடன் இந்த ஒப்­பந்தம் தொடர்பான ஆரம்பக்கட்ட  பேச்சுவார் த்தை கடந்த மாதம் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும்  ஈரான் தூதுவர் மொஹமட் ஸாரி அமிரானி ஆகியோருக் கிடையில் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00