எதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சகல பிரதேச சபைகளையும் கைப்பற்றி தமிழ் முற்போக்கு கூட்டனியின் தனித்துவத்தை உறுதிபடுத்துவோம் என ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். 

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டத்தில் 2,865 பயனாளிகளுக்கு பிரதமர் ரணில் விக்கமசிங்க தலைமையில் காணி உறுதி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் வேலுகுமார் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

"நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதில் நுவரெலியா முற்போக்கு கூட்டனியின் சார்பில் போட்டியிட்ட திகாம்பரம் அவர்களின் ஆதரவாளர்களின் வாக்களர்களின் பங்களிப்பு இன்றியமையாதது,  அன்று முற்போக்கு கூட்டனியின் வாக்குறுதிக்கமைய காணி உறுத்துடனான 7 பேர்ச்சஸ் கணியில் தனி வீட்டுத்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றோம். 

எமது வேலைத்திட்டத்தை தாங்கிகொள்ள முடியாத சிலருக்கு ஒருவித நோய் ஏற்பட்டுள்ளது  நாம் எதை செய்தாலும் அது அவர்களின் திட்டம் என கூறித்திரிகின்றனர். 

காணி உறுதி,  தனி வீடு,பிரதேச சபை அதிகரிப்பு என்பன  முற்போக்கு கூட்டனியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு  நுவரெலியா மாவட்டத்தில் 30 வருடங்களாக அரசியல் செய்ததாக கூறிக்கொள்பவர்கள் தற்போது எங்களுடைய திட்டம் என உரிமை  கோருகின்றனர்.   

தற்போது பல்கலைகழகம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம் விரைவில் அதற்கான சாதகமான பதில் கிடைத்தவுடன் அதற்கும் உரிமை கோருவார்கள்  நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்னெடுக்க நோய் அதிகரித்துகொண்டே செல்கின்றது.

தற்போது வீடுகளுக்கு சென்று ஆணி அடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பின்னால் செல்வோர் தமிழ் முற்போக்கு கூட்டனியுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்" என்றார்.