நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய சப்ரகமுவ, ஊவா, வடக்கு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுள் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக மழையுடனான காலநிலை காரணமாக இரத்­தி­ன­புரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.