வெண்ணிலா கபாடிக்குழுவிற்கு பிறகு அதன் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு வசூல் ரீதியாக வெற்றியைக் கொடுத்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குநர் எழில்.

மாவீரன் கிட்டு, கதாநாயகன் என வணிக ரீதியில் வெற்றிப் பெறாத படத்தைக் கொடுத்ததால் அப்பட நாயகனான விஷ்ணு விஷால் தனக்கு மீண்டும் ஒரு கொமர்ஷல் வெற்றியைத் தாருங்கள் என இயக்குநர் எழிலிடம் சரணடைந்திருக்கிறார்.

இயக்குநர் எழில் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் விஷ்ணுவிஷால். இந்தப்படத்தை எழிலும், விஷ்ணுவிஷாலும் இணைந்து தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கண்டிப்பாக புஷ்பா புருசனான சூரி இருக்கிறாராம்.

விஷ்ணு விஷால் தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், பெண் ஒன்று கண்டேன், சின்ட்ரெல்லா, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்