மாண­வர்­களின் வினைத்­தி­றன்­மிக்க கற்­றலின் தொடர்ச்­சி­யான செயற்­பா­டு­களில் குடும்ப பொரு­ளா­தாரக் கார­ணிகள் செல்­வாக்குச் செலுத்­துகின்­றன. கல்­வியில் சம­வாய்ப்­புக்கள் மற்றும் தேடிக்­கற்றல் எனும் கொள்­கைகள் கொண்ட எமது நாட்டில் ஒவ்­வொரு மாண­வர்­க­ளி­னதும் வெவ்­வேறு அள­வு­கொண்ட வினைத்­திறன் மிக்க கற்­றலை குடும்பம் சார் பொரு­ளா­தாரம் தீர்­மா­னித்­து­வி­டு­கின்­றது. 

பிள்­ளைகள் வீட்டில் கற்­ப­தற்­கான பொருத்­த­மான நவீன சூழ­லின்மை, குடும்ப மாதாந்த வரு­மானம் போதாமை, பணத்­தே­வைக்­காக பிள்­ளை­களை மாலை வேளை­களில் தொழி­லுக்கு அனுப்­புதல், பெற்றோர் வெளி­நாடு செல்­லுதல், போஷாக்­கான உண­வு உட்­கொள்­ளாமை போன்ற பொரு­ளா­தா­ரத்­தினை மைய­மா­கக்­கொண்ட கார­ணி­க­ளினால் பிள்­ளைகள் வீட்­டிலும், பாட­சா­லை­க­ளிலும் வினைத்­திறன் கொண்ட செயற்­பா­டு­களை கல்வி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்தி தம்மை முழு­மை­யாக கல்­விக்கு அர்ப்­ப­ணித்­துக்­கொள்­வ­தில்லை.

ஆய்வு முடி­வு­களின் அடிப்­ப­டையில் மாண­வர்கள் தொடர்ச்­சி­யாக கல்­வியைக் கற்க விருப்­ப­மு­டை­ய­வர்­க­ளாக இருந்தும் கற்­ற­லுக்குத் தேவை­யான முறை­யான வீட்டு வச­திகள் கிடைக்­காமை, பெற்­றோரின் அக்­க­றை­யின்மை, வறுமை போன்ற பல கார­ணி­களால் கற்­றலின் வினைத்­திறன் மிக்க செயற்­பா­டு­களை முறி­ய­டித்­து­வி­டு­கின்­றன. 

உள­வியல் ரீதி­யாக நோக்­கும்­போது கற்றல் கொள்­கை­களின் படி மாண­வர்­க­ளுக்­கான தேவைகள் படிப்­ப­டி­யாக நிறை­வேற்­றப்­படும் போதுதான் முழு­மை­யான நடத்தை மாற்­றத்­தினை கற்­ற­லி­னூ­டாகப் பெற­மு­டியும். இவை இன்று பொரு­ளா­தா­ரத்­தினை அதிகம் கொண்ட பிள்­ளை­க­ளுக்கு மட்டும் சாத்­தி­யப்­ப­டு­கின்­றது. 

கல்விச் சமத்­துவம் எனும் பல்­வேறு இலக்­கு­களை பாட­சாலை எனும் நிறு­வ­னத்­தி­னூ­டாக நிறை­வேற்ற வேண்டும் என்­கின்ற எதிர்­பார்ப்பு இன்­றை­ய­ கல்­வியின் குறிக்­கோ­ளாகும். ஆனால் சம­னற்ற குடும்ப பொரு­ளா­தா­ரத்தின் சிக்கல் நிலை­களால் மாண­வர்கள் கல்­வியைப் பெறு­வதில் ஏற்றத் தாழ்­வு­களை சந்­திக்க நேரி­டு­கின்­றது. வசதி கொண்ட பிள்­ளைகள் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு பிரத்­தி­யே­க­மாக செல­வு­களை மேற்­கொண்டு கற்­றலின் வினைத்­திறன் செயற்­பா­டு­களை அதி­கப்­ப­டுத்தும் ஒரு­பக்கம் வறுமை நிலையில் வாழும் பிள்­ளைகள் வீட்டில் கல்வி கற்­ப­தற்­கான வாய்ப்பே இல்­லாமல் சிக்­கித்­த­விக்கும் இன்­னொரு பக்க நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. மாண­வர்­களை மைய­மாகக் கொண்டே ஒரு நாடு ஊட்டம் பெறு­கின்­றது. இதற்­கா­கவே ஒவ்­வொரு பாட­சா­லையும் உயிர்ப்­பான குறிக்­கோள்­க­ளுடன் உரு­வாக்­கப்­பட்­டி­ரு­க்கின்­றது. 

இன்­றைய நவீன கால­கட்­டத்­தினை நோக்கும் போது சமூ­கத்தில் இடம்­பெறும் ஒவ்­வொரு செயற்­பா­டு­களும் பொரு­ளா­தார அடிப்­ப­டை­யி­லேயே இடம்­பெ­று­கின்­றன. ஆரம்­ப­கா­லத்தில் சேவை அடிப்­ப­டையில் வழங்­கி­வந்த கல்வி இன்று பொரு­ளா­தா­ரத்­தினை நோக்கிச் செல்­கின்­றது. மாணவர் மையக்­கல்­வியை நிறைவு செய்­வதில் குடும்பம் தமது பங்­க­ளிப்­பினை பொரு­ளா­தார ரீதியல் வழங்­க­வேண்­டிய பொறுப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. 

ஆனால் வீட்டுப் பொரு­ளா­தாரக் கார­ணி­களின் சிக்­க­லான நிலை­மைகள் பிள்­ளையின் கற்றல் விருத்­திக்கு தடை­யா­கவும் உள்­ளன. அதா­வது பிள்­ளையின் அடிப்­படைத் தேவைகள் குடும்­பத்தால் நிவர்த்தி செய்­யப்­ப­டாமை வினைத்­திறன் மிக்க கல்­வியை வறிய மாண­வர்கள் பெற­மு­டி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது. இன்று வகுப்­ப­றையில் மாண­வர்கள் தமது குடும்பப் பொரு­ளா­தா­ரத்தின் சமத்­து­வ­மற்ற நிலைமை மாண­வர்­களின் ஏற்­றத்­தாழ்­வு­க­ளுக்கு வழி­செய்­கின்­றது. 

பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியில் போட்டி நில­வு­கின்ற சூழலில் பிரத்­தி­யேக போத­னை­களை மாணவர்கள் பெறு­வது தவிர்க்க முடி­யாத ஒன்­றாகிவிட்­டது. திறமை அடிப்­ப­டையில் வேலை வாய்ப்­புக்கள் இன்று மாண­வர்கள் பாட­சா­லைக்­கல்­வியை மட்டும் நம்­பி­யி­ருக்­காது எத்­தனை மேல­திக வகுப்­புக்­க­ளுக்குச் செல்ல முடி­யுமோ அத்­தனை வகுப்­புக்­க­ளுக்கும் செல்­லத்­தூண்ட வைக்­கின்­றது. பொரு­ளா­தா­ரத்தில் வச­தி­கொண்ட மாண­வர்கள் இவ்­வாய்ப்­புக்­களை மட்­டு­மல்­லாமல் வல­யத்­த­ளங்கள் மூலம் தமக்கு வேண்­டி­யதை பதி­வி­றக்கம் செய்­யவும், புதிய தொழி­ல்நுட்­பங்­களைப் பயன்­ப­டுத்­தவும் தமது குடும்­பத்தின் பண­ப­லத்­தினை துணை­யா­கக் ­கொள்­கின்­றனர்.

கல்­வியில் சமத்­துவம், கல்­வியில் சம­வாய்ப்­புக்கள், இல­வ­சக்­கல்வி எனும் அடிப்­படை கல்­விக்­கொள்­கைகள் காணப்­படும் எங்­க­ளு­டைய நாட்டில் இன்று கல்­வியைப் பெறு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­ரிக்­கப்­பட்­டாலும் அவை சகல பிள்­ளை­க­ளுக்கும் சாத்­தி­யப்­பட வேண்டும். பொரு­ளா­தாரப் பலம் கொண்ட மாண­வர்­க­ளுக்கு மட்டும் சாத்­தி­யப்­ப­டக்­கூ­டாது. இன்று வறு­மைக்­கோட்­டுக்கு கீழ் உள்ள குடும்­பங்­களில் வாழும் பிள்­ளைகள் தமது குடும்ப வறுமை கார­ண­மாக தமது உட­லையும், உள்­ளத்­தி­னையும் வருத்­திக்­கொண்டு கல்வி கற்க வேண்­டிய சூழ்­நிலை ஒன்று வரு­வ­தனை தடுக்­க­வேண்டும். 

கல்வி என்­பது அனைத்து மாண­வர்­க­ளி­னதும் உரிமை. ஆனால் தாழ்­நிலை குடும்பப் பொரு­ளா­தாரம் கார­ண­மாக மாண­வர்­களின் கல்வி உரிமை மறுக்­கப்­ப­டக்­கூ­டாது. பாட­சா­லைக்­கல்வி தவிர்ந்த ஏனைய முறை­களில் பெற்­றுக்­கொள்ளும் கல்­வியில் வினைத்­திறன் கொண்ட மேல­திக செயற்­பா­டுகள் அனைத்து மாண­வர்­க­ளுக்கும் சாத்­தி­யப்­பட வேண்டும். வறிய மாண­வர்­களின் கற்­றலில் குடும்­பப் ­பொ­ரு­ளா­தாரம் ஒரு தடை­யாக இருக்­கக்­கூ­டாது. அத்­தோடு குடும்பப் பொரு­ளா­தார கஷ்­டத்­தினால் கல்வி இடை­நி­றுத்­தப்­ப­டக்­கூ­டாது. வீட்­டுக்­கற்றல் சூழ்­நிலை பாட­சா­லைக்­கற்றல் சூழ்­நி­லைக்கு ஒத்த தன்­மை­யா­கக் ­கா­ணப்­படல் வேண்டும். அப்­போது தான் உயி­ரோட்டம் கொண்ட கற்­றலை மாண­வர்கள் பெறுவர். இவ்­வா­றாக இவ்­வாய்வின் அவ­சியம் தேவைப்­ப­டு­கின்­றது.    

மாண­வர்கள் தமது எதிர்­கால வாழ்க்கை தொடர்­பாக முடி­வெ­டுக்கும் கால­கட்­டத்தில் வாழ்­ப­வர்கள். இவர்­க­ளுக்கு கல்வி கற்­ப­தற்­கான சிறந்த சூழ­லினை குடும்பம் வழங்க வேண்டும். இதில் பொரு­ளா­தார அம்­சங்­க­ளோடு மாண­வர்கள் இணைக்­கப்­ப­டக்­கூ­டாது. கல்வி அறிவில் குறைந்த அல்­லது நடுத்­தர நிலை­யி­லுள்ள பெற்றோர் தங்­க­ளது பிள்­ளை­களை பரம்­ப­ரை­யான தொழில்­களில் ஈடு­ப­டுத்­து­கின்­றனர் (விவ­சாயம், மீன்­பி­டித்தல், நகை) கல்வி அறிவில் பின்­தங்­கிய பெற்றோர் தங்­க­ளது பிள்­ளை­களை வேலை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தற்­காக இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­து­வ­தோடு வறு­மை­யைப்­போக்க வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்­றனர். 

தந்­தைக்கு தொழில் இல்­லாமல் தாய் தலை­மை­வ­கிக்­கின்ற சில வீடு­களில் தாய் வேலைக்குச் செல்­வ­தனால் பிள்­ளை­களை சரி­யான முறையில் கவனம் செலுத்­தமுடியா­மையால் வினைத்­திறன் தன்­மைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு கல்வி அலட்­சி­ய­மாக்­கப்­ப­டு­கின்­றது. பாட­சா­லை­களில் உரிய கல்­வி­ ந­ட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டா­ததால் மாண­வர்கள் பிரத்­தி­யேக வகுப்­புக்­க­ளுக்கு சென்று கற்­கின்­றனர். ஆனால் பொரு­ளா­தார நிலையில் பின்­தங்­கிய மாண­வர்­க­ளுக்கு அவை கானல் நீர்­போன்­றா­கி­வி­டு­கின்­றது. பிரத்­தி­யேக வகுப்­புக்­களின் இக்­கால கட்­ட­ணங்­களின் உயர்ச்சி வறிய மாண­வர்­களின் மேல­திக கல்விக்கான செயற்­பா­டு­களை முடக்­கி­வி­டு­கின்­றது. அந்­த­வ­கையில், மாண­வர்­களின் வினைத்­தி­ற­னான கற்­ற­லுக்குத் தேவை­யான மேல­திக ஊக்கம் கொடுக்கும் குடும்ப பொரு­ளா­தாரக் கார­ணி­களைப் பெற்­றுக்­கொ­டுத்தல், மாண­வர்­களின் வினைத்­திறன் மிக்க கல்வி முன்­னேற்­றத்தைக் குறைப்­பதில் உள்ள ஆசி­ரி­யர்­களின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்தல், பொரு­ளா­தா­ரத்தில் பின்­தங்­கிய மாண­வர்­களின் வினைத்­தி­ற­னான கற்­றலைப் பாதிக்கும் கார­ணங்­களைக் கண்­ட­றிந்து பெற்­றோ­ருக்­கான விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்தல், கல்­வியில் சம­வாய்ப்­புக்கள் எனும் பதத்­தினை படுத்தல், கல்வியில் சமவாய்ப்புக்கள் எனும் பதத்தினை உறுதியானதோர் நிலைக்குக் கொண்டுவருதல் போன்றவற்றினை தீர்வுச் செயற்பாடுகளாக முன்வைக்கலாம்.