இவ­ரது கால் பெரு­விரல் நகத்தைப் பார்த்து இது என்ன அசிங்­க­மாக இருக்­கி­றது என்று கேட்­கா­தீர்கள்.  பாவம் அவ­ரது வேதனை அவ­ருக்­குத்தான் தெரியும்.  

நகக் கரை ஓர­மாகப் புண். நீண்ட கால­மாக இருக்­கி­றது. அருகில் எங்கோ மருந்து கட்டிக் கொண்டு திரி­கிறார்.  

புண்ணும் மாற­வில்லை  வேத­னையும் குறை­ய­வில்லை  புண்ணில் சதை­வ­ளர்ந்து நக ஓரத்தை மூடிக் கிடக்­கி­றது  உற்றுப் பார்த்தால் நோயுற்ற பகு­தியில் உள்ள நகத்தின் நுனிப் பகுதி சதைக்குள் ஆழப் புதைந்து கிடப்­பது தெரியும்.  

மாறாக, நகத்தின் மறு கரை ஓரத்தை அவர் சற்று ஆழ­மாக வெட்­டி­யி­ருப்­பதை அவ­தா­னித்து இருப்­பீர்கள். ஆனால் நல்ல கால­மாக அது புண்­ப­ட­வில்லை.  

நகத்தின் நுனி­யா­னது சதைக்குள் புதை­யுண்டு கிடந்து, அதன் மேல் தசை வளர்­வ­தையே புதை­யுண்ட நகம் (Ingrown Toe nail) என்று சொல்­லு­வார்கள்.  

இது ஏன் ஏற்­ப­டு­கி­றது?  

முக்­கிய காரணம் நகங்­களை சரி­யான முறையில் வெட்­டா­மைதான்.  

நகத்தின் ஓரங்­களை நேராக வெட்­டாமல் பிறை போல வளைத்து வெட்­டும்­போது நக ஓரத்தில் உள்ள சதையும் வெட்­டுப்­படும் அபாயம் உண்டு.  

அவ்­வாறு வெட்­டினால் நக­மா­னது வெளி நோக்கி வள­ராது தசைப் பகு­தியை ஊடறுத்து வளர முயல்­வ­தால்தான் இந்தப் பிரச்­சினை ஏற்­ப­டு­கி­றது.  நுனிப் பகு­தியில் இறுக்­க­மான சப்­பாத்­துக்­களை அணி­வதும்,. குதி உயர்ந்த சப்­பாத்­துக்­களை அணி­வதும் கார­ண­மா­கலாம்.  

அடிக்­கடி விரல் நுனியில் காயங்கள் ஏற்­ப­டு­வதும் கார­ண­மா­கலாம். உதா­ர­ண­மாக கால்­பந்து விளை­யாட்டின் போது அவ்­வா­றான காயங்கள் ஏற்­ப­டு­வ­துண்டு.  

என்­னிடம் வந்த ஒரு நோயளி தனது கவ­ன­யீனம் கார­ண­மாக தனது விரல்  நுனியை மேசை கதி­ரை­களில் அடி­ப­டவி ட்ட காயங்­களால் தான்­அவ்­வாறு ஆனது என்றார்.  ஒரே குடும்­பத்தை சேர்ந்­த­வர்­க­ளிடம் வரு­வதும் அவ­தா­னிக்கப்­பட்­டுள்­ளது.  

இது பரம்­பரை நோயல்ல. அவர்­க­ளது விரல், எலும்பு, நகம் ஆகி­ய­வற்றின் வளைவு சற்று அதி­க­மாக இருப்­பது காரணம் என நம்­பப்­ப­டு­கி­றது.  இவ்­வாறு நகம் புதை­யுண்டு போனால் வெறு­மனே மருந்து கட்­டு­வ­தாலோ அன்­ரி­ப­யோடிக் மருந்­து­களை உப­யோ­கிப்­ப­தாலோ சுகம் கிடைக்­காது.  

விரலை மரக்கச் செய்­வ­தற்கு ஊசி போட்டு சதை வளர்ந்­துள்ள  பகு­தியில் உள்ள நகத்தை வெட்டி எடுத்­து­விட்டு மருந்து கட்­டு­வார்கள். முழு  நகத்­தையும் அகற்ற வேண்­டிய தேவை இல்லை.  

நகத்தின் அப் பகுதி மீண்டும் வளர்ந்து வரும் போது மீண்டும் நகம் பாதிப்பு அடை­யாமல் இருக்­கு­மாறு கவ­ன­மாக இருங்கள்.  

நகம் வெட்­டும்­போது வளைத்து வெட்டி நகக் கரை­யோர விரல் நுனி  காயமடையாமல் பாதுகாப்பாக வெட்ட வேண்டும். அதாவது நகத்தை வளைத்து வெட்டாமல்  நேராக வெட்டுங்கள்.   நுனிப் பகுதி இறுக்கமாக சப்பாத்து அணிய வேண்டாம்.   குதி உயர்ந்ததும் வேண்டாம்.