வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை சீனா­விற்கு செல்­கின்றார். 

நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை சீனாவில் தங்­கி­யி­ருக்கும் அவர் சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வோங் ஹீயின் உள்­ளிட்ட அந்­நாட்டு அரச தலை­வர்­களை சந்­தித்து இரு தரப்பு கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­ப­ட­வுள்ளார்.   

மறு புறம் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் சீன விஜ­யத்தின் போது பல முக்­கிய விட­யங்கள் குறித்து இரு தரப்பு பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

அம்­பாந்­தோட்­டையில் இயற்கை எரி­வாயு மின் திட்டம் ஒன்றை ஆரம்­பிப்­பது தொடர்­பாக சீனா­வுடன் பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன் இறு­திக்­கட்டம் குறித்து தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.   

இந்­தியா மற்றும் ஜப்­பா­னு­டனும் இணைந்து இரண்டு இயற்கை எரி­வாயு மின் திட்­டங்­களை ஆரம்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஏற்­க­னவே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யி­லேயே மூன்­றா­வது எரி­வாயு மின் திட்­டத்தை சீனாவின் மூலம் அமைப்­ப­தற்­கான விருப்­பத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்தார்.   

எனவே சீனாவின் பங்­க­ளிப்­புடன் மூன்­றா­வது எரி­வாயு மின் திட்­டத்தை அம்­பாந்­தோட்­டையில் அமைக்கும் திட்­டத்தை துரி­தப்­ப­டுத்தும் வகையில் சீனா ஆர்­வத்­துடன் செயற்­ப­டு­கின்­றது. பல சுற்று பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் வெளி­வி­வ­கார அமைச்­சரின் இந்த விஜ­யத்தின் போது இது குறித்து பேசப்­ப­ட­வுள்­ளது.   

சீனாவின் அனைத்து ஆளு­மை­யு­டனும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற புதிய பட்­டுப்­பாதை திட்­டத்தில் இலங்­கையில் அம்­பாந்­தோட்டை வல­யத்தின் முக்­கி­யத்­து­வத்தை சீனா சிறந்து கணித்­துள்­ளது. 

எனவே தான் அம்­பாந்­தோட்டை துறை­முகத் திட்­டத்­திற்கு அப்பால் சென்று சீனா முழு இலங்­கைக்­கு­மான தனது திட்­டங்­களை விஸ்­த­ரித்து வரு­கின்­றது என இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.   

குறிப்­பாக இலங்­கையில் எரிப்­பொருள் சந்­தையை குறி­வைத்து பல்­வேறு முன்­னெ­டுப்­பு­களை சீனா தற்­போது எடுத்து வரு­கின்­றது. 

இதற்கு பிர­தான காரணம் மத்­தள விமான நிலைய அபி­வி­ருத்தி திட்டம் கைவிட்டு போன­மை­யாகும். இந்­நி­லையில் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்கு அருகில் 3 பில்­லியன் டொலர் முத­லீட்டில் பாரிய எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை அமைப்­ப­தற்­கான விருப்­பத்­தையும் அறி­வித்­துள்­ளது.   

இவ்வாறு இலங்கையின் தேசிய பொருளாதார சந்தையில் முக்கிய நிலைகளாக கருதக் கூடிய துறை களில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின் றது. இதற்காக எத்தகையதொரு இழப்புகளை விட்டுக்கொடுக்கவும் சீனா தயாராகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.