எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்­பான விசேட கூட்­ட­மொன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் எதிர்வரும் 3 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ள­துடன், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிளவைத் தடுத்து ஒன்­றி­ணைந்து போட்­டி­யி­டு­வது குறித்து விசேட கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் தொகுதி அமைப்­பா­ளர்கள் கலந்து கொள்ளும் இந்த விசேட கூட்­டத்தில் தீர்க்­க­மான முடி­வுகள் எட்­டப்­ப­டலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்த விசேட கூட்­டத்­துக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யைச்­சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யிடல், வேட்­பாளர் பட்­டியல் தெரிவு செய்தல் மற்றும் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளல் போன்ற விட­யங்கள் குறித்தும் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த இரு தரப்­பி­னரும் ஒன்­றி­ணைந்து பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.