2015 ஆம் ஆண்டில் Huawei அனுப்பிவைத்துள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனைத் தாண்டியுள்ளதுடன், தரவு ஆராய்ச்சி நிறுவனமான IDC இன் கணிப்பின் பிரகாரம் சீனாவின் Huawei, மிகப் பாரிய வெற்றியீட்டிய நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டில் சாதனை எண்ணிக்கையாக 1432.9 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் ஒட்டுமொத்தமாக வெவ்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

IDC இன் தரவுகளின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டில் பெறுபேற்றுரீதியாக அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கிய நிறுவனங்களுள் ஒன்றாக சீனாவின் Huawei மாறியுள்ளது. 

“ஸ்மார்ட்போன் சந்தை வழமையாக Samsung மற்றும் Apple வர்த்தகநாமங்களின் பெறுபேறுகளில் தங்கியிருக்கும், ஆனால் இரண்டு காலாண்டுகள் மற்றும் முழுமையான ஆண்டில் Huawei இன் உறுதியான பெறுபேறுகள் ஒரு சர்வதேச வர்த்தகநாமம் என்ற வகையில் Huawei எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் புலப்படுத்துகின்றன” என்று IDC இன் சர்வதேச காலாண்டு கைத்தொலைபேசி கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட ஆராய்ச்சி முகாமையாளரான மெலிஸா சாவ் குறிப்பிட்டார்.  

சீனாவில் மந்தநிலை காணப்பட்டமைக்கு மத்தியிலும், ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில் Huawei ஆனது “பன்முக விரிவுபடுத்தல் நடவடிக்கையை சர்வதேசரீதியாக வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதுடன், அரைவாசிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை சீனாவிற்கு வெளியில் உள்ள நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், பன்முகப்படுத்தல் விரிவாக்க நடவடிக்கையானது நான்காவது காலாண்டிலும், 2015 ஆம் ஆண்டு நிறைவில் ஒட்டுமொத்தமாகவும் Huawei மூன்றாவது ஸ்தானத்தை எட்ட உதவியுள்ளது. இதற்கு மறு எதிராக போட்டியாளர்களான Xiaomi இனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள எண்ணிக்கை சீனாவிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது (90 சத வீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கை).

மேலும் முதல் 5 ஸ்தானங்களிலுள்ள தொழிற்பாட்டாளர்கள் மத்தியில் Huawei ஆனது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிக உறுதியான வளர்ச்சியை (37 சதவீதம்) பதிவாக்கியுள்ளது. 

ஆண்டு ஒன்றில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை அனுப்பிவைத்துள்ள நான்காவது கைத்தொலைபேசி விற்பனையாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்த சீன நிறுவனம் தனதாக்கியுள்ளது. இந்த பெருமையை இது வரை Nokia, Samsungமற்றும் Apple ஆகியன மட்டுமே கொண்டுள்ளன.