கொஸ்கொடையில் இன்று (29) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் என்று தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாகவே இப்படுகொலைச் சம்பவம் நடந்திருக்கிறது என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பலியானவர்கள் 52 வயதான தந்தையும் அவரது இரண்டு மகன்களுமே என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று படுக்கையில் இருந்த மூவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதேவேளை, கொஸ்கொடயின் மெனிக் கம பகுதியைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

கொஸ்கொட, குருந்துகம்பியஸ பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு துப்பாக்கிச் சூட்டில், பதினைந்து வயது மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கிடையே தொடர்பு இருப்பதாகவும், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட முன் விரோதத்தின் விளைவாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி:

கொஸ்கொடையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி!