1.6 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் வெள்ளவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வெள்ளவத்தையில் சந்தேகத்துக்கிடமான இரண்டு பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.6 கிலோகிராம் எடை கொண்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் இலங்கைப் பெறுமதி சுமார் ஒன்றரைக் கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.