சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது கட்டலோனியா

Published By: Devika

27 Oct, 2017 | 07:28 PM
image

ஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரக் குடியரசாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்டலோனிய மக்கள் பெரும் சந்தோஷக் களிப்பில் சுதந்திரத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

கட்டலோனிய பாராளுமன்றில் இன்று (27) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம், ஸ்பெயினின் ஆளுகையில் இருந்து கட்டலோனியா சுதந்திரம் பெற்றுள்ளது. 

கட்டலோனியாவின் ஜனாதிபதியை உடனடியாகப் பதவி விலக்கி, அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ஸ்பெயின் பிரதமர் அந்நாட்டு செனட் சபையில் அனுமதி கோரியிருந்தார்.

அதற்கு இன்னும் சில மணி நேரங்களில் அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கட்டலோனிய பாராளுமன்றில் இவ்வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

கட்டலோனியாவின் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்பு உள்நாட்டு நேரப்படி இன்று (27) காலை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுமார் பதினைந்து உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

எனினும், வாக்கெடுப்பில் 70 பேர் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இரண்டு வாக்குகள் எவ்வித முடிவும் குறிக்கப்படாமல் அளிக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்துக்கு எதிராக பத்து வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இதையடுத்து, கட்டலோனியா சுதந்திரம் பெற்றதாகப் பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17