பாதியில் கலைந்த இளம் சகோதரிகளின் கனவுகள்!

Published By: Devika

27 Oct, 2017 | 05:37 PM
image

அனுராதபுரம் - புத்தளம் வீதியில் நேற்று (26) இடம்பெற்ற விபத்தில் சகோதரியர் இருவர் பலியாகினர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

உயிரிழந்த இரு பெண்களும் நொச்சியாகமையைச் சேர்ந்த சகோதரிகள். கடினமான குடும்பச் சூழலிலும் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கியதுடன், அப்பகுதியின் முதல் பட்டதாரிச் சகோதரிகள் என்ற பெருமையையும் பெற்றிருந்தனர்.

பட்டப்படிப்பை முடித்த மூத்த சகோதரி ஜயனி ஸ்வேதா ஜயகொடி வடமத்திய மாகாண மருத்துவ அமைச்சின் கணக்குத் தணிக்கைப் பிரிவிலும், இளையவரான சமாதி நவோத்யா ஜயகொடி ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தனர்.

எப்போதும் ஒன்றாகவே மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள், சம்பவ தினத்தன்றும் வேலைக்காக ஒன்றாகவே வீட்டில் இருந்து கிளம்பினர். எனினும், அதுவே அவர்களது இறுதிப் பயணமாகவும் அமைந்தது.

அவர்கள் அனுராதபுரம் - புத்தளம் வீதியின் புலத்குலம பகுதியை அண்மித்த வேளை, எதிரில் வேகமாக வந்த லொறியொன்று மோதி இருவரும் தூக்கியெறியப்பட்டனர். 

குறித்த லொறியானது, கால்நடைகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றுகொண்டிருந்ததாகவும், அந்த லொறியை பொலிஸார் துரத்திச் சென்றதாலேயே லொறி அதிவேகமாகப் பயணித்ததாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

விபத்தின் பின் குறித்த லொறியும் குடை சாய்ந்தது. லொறி சாரதியை மக்கள் நையப்புடைத்தனர். எனினும், பின்னால் வந்த பொலிஸார் சாரதியை கோபத்தின் உச்சத்தில் இருந்த மக்களிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எப்படியோ... முயற்சியும் திறமையும் கொண்ட இரண்டு இளம் பெண்களின் கனவுகள் பாதியிலேயே கலைந்தது நொச்சியாகம பகுதி மக்களைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21