தென்னாப்பிரிக்காவில் ஒருவர் நூறு பலூன்களின் உதவியுடன் 2 மணிநேரம் வானில் பறந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கைவை சேர்ந்தவ டாம் மார்கன் என்பவர் ஹீலியம் வாயுவினால் அடைக்கப்பட்ட 100 பலூன்களின் உதவியுடன் வானத்தில் பறந்து சாகசம் நிகழ்த்தியுள்ளார்.

பலூன்கள் அனைத்தையும் ஒரு நாற்காலியில் இணைத்து வானில் 8,300 அடி வரை அவர் பறந்து காட்டியுள்ளார். 

இதுகுறித்து டாம் மார்கன் கூறுகையில்,

"குறைந்த செலவில் வானில் மிதந்து கொண்டு ஆப்பிரிக்காவை சுற்றி பார்ப்பது ஒரு அற்புதமான ஒன்று அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" எனக் கூறினார்.

மேலும் பலூனில் வானில் பறப்பதற்கு முன் பல்வேறு சோதனை செய்யப்பட்டதாகவும். அதற்கு பின்னரே இந்த இடத்தை தேர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.