குடும்பத் தகராறில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளான சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டன் பீட்டர் டெலிகன் ஃபெர்னாண்டோ மற்றம் அந்தனி சேவியர் ஃபெர்னாண்டோ என்ற இவ்விரு சகோதரர்களும், அதே பகுதியைச் சேர்ந்த தமது உறவினரான இந்திக்க ஃபொன்சேகாவை குடும்பத் தகராறினால் கொலைசெய்தனர். 

இச்சம்பவம் 2001ஆம் ஆண்டு இடம்பெற்றது.

இவ்வழக்கின் தீர்ப்பை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ இன்று (27) வழங்கினார்.