9ஆம் ராமரின் உடல் ஓராண்டுக்கு பின்னர் தகனம்

Published By: Digital Desk 7

27 Oct, 2017 | 03:22 PM
image

மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் உடல் ஓராண்டுக்குப் பின் புத்த மத வழக்கப்படி நேற்று தகனம் செய்யப்பட்டது.

1946 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி தாய்லாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்ட பூமிபால் அதுல்யதேஜ் 9ஆம் ராமர் என அழைக்கப்பட்டார்.

தாய்லாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக இருந்த பூமிபால் உடல் நலக்குறைவால் தனது 88ஆவது வயதில்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் திகதி உயிரிழந்தார்.

நவீன தாய்லாந்தை உருவாக்கிய பெருமையை கொண்ட மன்னர் பூமிபாலின் மறைவுக்கு ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அவரது உடலுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் மன்னர் இறந்து ஓராண்டு முடிந்த நிலையில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இதற்காக மன்னர் பூமிபாலின் அரண்மனையில் கடந்த 5 நாட்களாக புத்த மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்று வந்தன. மேலும் மன்னரின் உடலை தகனம் செய்வதற்காக 600 கோடி ரூபாய் செலவில் தகன மேடை அமைக்கப்பட்டது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தகன மேடையை அமைக்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டிருந்தது. தங்க முலாம் பூசப்பட்ட அரண்மனை வடிவில் தகன மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதனை சுற்றிலும் நுண்ணிய கலை நுட்ப வேலைபாடுகளுடன் கூடிய தங்கச் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இராணுவ வீரர்களும் மன்னரின் உடலை கொண்டு வரும்போது அளிக்க வேண்டிய மரியாதைக்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.

மன்னரை  கடைசியாக பார்த்துவிட வேண்டும் என மன்னரின் உடல் கொண்டுவரப்படும் வழிநெடுகிலும் மக்கள் கடந்த ஒரு வாரமாக மழை மற்றும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்துக்கிடந்தனர்.

இந்நிலையில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் மன்னர் பூமிபாலின் உடல் நேற்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கறுப்பு உடையணிந்து மன்னருக்கு இறுதியாக கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.

மன்னரின் உடல் தகனத்தையொட்டி தாய்லாந்து நாட்டில் நேற்று பொது விடுமுறை விடப்பட்டிருந்தது. அங்கு அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் மன்னரின் குடும்பத்தினருடன், 40 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இறுதிச்சடங்கை யாரும் செல்பி எடுக்க கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டது.

புத்த மத வழக்கப்படி  இரவு 10 மணிக்கு மன்னர் உடலுக்கு அவரது மகனும், புதிய மன்னருமான வஜிரலோங்கோன் தீ மூட்டினார்.

மன்னரின்  உடல் தகனம் முடிந்து விட்டதால்  இனி முறைப்படி புதிய மன்னராக பூமிபாலின் மகன் வஜிரலோங்கோன் முடி சூட்டப்படுவார். அவர் பத்தாம் ராமர் என்று அழைக்கப்படுவார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47